P.T.Lee செங்கல்வராய நாயக்கர்

வன்னிய குல சத்திரியர்

P.T.Lee செங்கல்வராய நாயக்கர் ஒரு வன்னிய குல சத்திரியர்.

அவர், காஞ்சிபுரத்தை அடுத்த "ஊவேரி" என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பட்டதாரி.

ஆங்கிலேயர் ஆட்சியில்,,, ஆட்சியாளர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக, இருந்தவர்.

சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை முன்னிருத்தி, அத்தியாவசியமான, உணவு மற்றும்  தொழில் சார்ந்த, சீசன் வியாபாரங்களை நடத்தியவர்.

அதில் கிடைத்த வருமானங்களில்,,, சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில், பல அசையா சொத்துக்களை வாங்கி சேர்த்தவர்.

தான் சம்பாதித்த பணம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, முதலீடாக்கி, முதன் முதலில், தமிழ்நாட்டிலேயே,  தொழில் அடிப்படையிலான "பாலிடெக்னிக்" என்ற கல்வி நிறுவனத்தை, தன் பெயரில் ஏற்படுத்தினார்.

அவர் சம்பாதித்த பணம், அசையா மற்றும் அசையும் சொத்துக்களை, தன் வாழ்வின் காலாவதிக்குப்பின்,,, ஒன்றினைந்து நிர்வகிக்க,,, "அறக்கட்டளை " ஏற்படுத்த உயில் ஆவணம் ஒன்றை எழுதி பதிவும் செய்திருந்தார்.

1829 பிறந்த செங்கல்வராய நாயக்கர் அவர்கள் 1874 ல், தன் 45 வது வயதில் இயற்க்கை எய்தினார்.


P.T.Lee செங்கல்வராய நாயக்கர் அவர்களின் வாரிசுகள், 22 பேருக்கு, வாழ்வாதார  உதவித்தொகை(Pention) , உயில் ஆவணத்தின் அடிப்படையில், இப்போதைய அறக்கட்டளை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.


Comment As:

Comment (0)